விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ. அதைதொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடந்து “ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.


இதில் “வில் அம்பு” திரைப்படம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கின. இருப்பினும் நடிகர் ஸ்ரீ குறிப்பிட்டு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தார்.
அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து சில ஆண்டுக்கான சினிமாவை விட்டு விலகி இருந்தால் நடிகர் ஸ்ரீ. அதன் பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அங்கீகரிக்கப்பட்டது.
இப்படி நடித்த படங்கள் எல்லாம் வெற்றிப்படங்கள் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்ற படங்கள் தான்.
இந்த நிலையில் மிகவும் அழகாகவும் மிடுக்காகவும் தோற்றத்தில் ஒரு துடிப்பான இளைஞன் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ தற்போது, ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் அளவுக்கு அவரது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
ஒரு பக்கம் இது அவர் இல்லை என்றும் மற்றொரு பக்கம் அவருக்கு மருத்துவ உதவி பண்ணப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்த விவகாரம் ஹிந்தி நடிகர் ஸ்ரீ தரப்பிலிருந்து எந்த வித விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here