பிக் பாஸ் சர்ச்சை: ஒரு ஆம்பள இப்படி டிரஸ் போடலாமா? கொந்தளித்த நடிகை வனிதா

0
164

பிக் பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும் ஒரு ஆண் போட்டியாளரின் உடை அணியும் விதத்தை நடிகை வனிதா கடுமையாக விமர்சித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இருப்பினும் அதில் நிறைய பேர் விஜய் டிவியின் சீரியல் நடிகர் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளர்கள் தான். இருப்பினும் இந்த சீசனிலும் சர்ச்சைக்கும், சண்டைக்கும  பஞ்சமில்லை.

தற்போது சீசன் சூடு பிடித்துள்ளது. அது என்னவென்றால் ஆண் போட்டியாளராக உள்ளே இருக்கும் சீரியல் நடிகர் சத்யா அவர்களின் உடையணியும் விதத்தை சர்ச்சை நடிகை வனிதா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “பெண் போட்டியாளர்கள் இருக்கும் இடத்தில் சத்யா இப்படி தான் டிரஸ் போடுவாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு முன்பு ஒளிப்பரப்பான சீசன்களில் நடிகை ஹசிகா ஆனந்த், கும்தாஜ், பூர்ணிமா, மாயா என பெண் போட்டியாளர்கள் அரைகுறை ஆடையில் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தார்கள். அப்போது கேள்வி கேட்காத நடிகை வனிதா இப்போது கேட்க வந்து விட்டார்களா? என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அடிக்கப் பார்க்கிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here