மீண்டும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் இருவர் சிக்கிள்ளனர். வேட்டையன் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்த போது வசமாக பெங்களூர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.
கர்நாடாக மாநிலம் பெங்களூரில் சட்டவிரோதமாக இணையதளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்கள் வெளியிடப்படுவதாக கேரள மாநில சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயந்தே இரண்டாம் மோஷனம் படத்தினை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்த வழக்கில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இரண்டு பேரை, கொச்சி காக்கநாடு பகுதியைச் சைபர் க்ரைம் போலீசார், பெங்களூருவில் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டினைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் குமரேசன் என்பது விசாரணயைல் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் அவர்களிடத்தில் வேட்டையன் படத்தின் பைரசி காப்பியும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில், இதனை கோவையில் உள்ள ஒரு திரையரங்கில் பதிவு செய்ததாகவும், தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ் ராக்கர்ஸைச் சேர்ந்தவர்கள் என்பதையும் சைபர் க்ரைம் போலீசார் உறுதி செய்தனர். இந்தத் தகவல் லைகா நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்னவே மறைமுகமாக வேட்டையன் படம் இணையத்தில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. டெலிகிராமில் வேட்டையன் படத்தை நிறைய பேர் பதிவிறக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here