Home Entertainment தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி காலமானார்

தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி காலமானார்

0
19

தேசிய விருது பெற்ற இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்.

நடிகர் ஸ்ரீ அவர்களை வைத்து ஏப்ரல் மாதத்தில், நடிகர் நடிகர் தனுஷூடன் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். இதில் “ஏப்ரல் மாதத்தில்” படம் மாபெரும் வெற்றியை அவருக்கு பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார். இதன் பின்னர் சில படங்களில் நடிக்கவும் செய்தார். அதன்படி, ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான பெரியார் என்ற திரைப்படத்தில், அறிஞர் அண்ணா கேரக்டரில் எஸ்.எஸ். ஸ்டான்லி நடித்திருந்தார்

இவர் ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்க்கார், பொம்மை நாயகி, வெள்ளை யானை சமீபத்தில் வெளியான மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் இன்று மாலை சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here