வேட்டையன் படத்திற்கு செம ஆஃபர் : சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

0
85

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை, அக்டோபர் 10 உலகெங்கிலும் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு திடீரென அனுமதி வழங்கியுள்ளது. 

‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

பெரும் எதிர்பார்ப்பு : 

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏற்கனவே, இப்படத்தில் இடம்பெற்ற “மனசிலாயோ” பாடல் அனிருத் இசையில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி :

‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள நேரத்தில் சிறப்பு கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

அதன்படி, நாளை ஒரு நாள் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது. வழக்கம் போல காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்கி, இரவு 2 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படம் தர்பார் படம் போன்று இருப்பதாக டிரெய்லரை பார்த்த ரசிகர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here