வாய்ப்பில்லாமல் வறுமையில் தவித்து கொண்டிருந்த காஜா, அம்மாவுக்கு இருந்த பிரச்சனை, திருமுருகன் செய்து இருக்கும் உதவி.

0
253

நாதஸ்வரம் தொடரில் நடித்த காஜா ஃபெரோஸின் தற்போதைய நிலை பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டுள்ளது. சன் டிவியில் சின்னத்திரை நாடகங்கள் எல்லாம் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியகளை சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள். மேலும், காலங்கள் சென்றாலும் மக்களின் பேவரட் தொடர்களில் ஒன்று தான் மெட்டிஒலி. 90 ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத தொடர்களில் ஒன்று மெட்டி ஒலி.

வருடங்கள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி தொடரை பற்றி மக்கள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த சீரியலின் மூலம் திருமுருகன் இருக்கின்றார். மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பின் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த சீரியல் தான் நாதஸ்வரம். இந்த தொடர் குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டுள்ளது. இந்த தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் குலதெய்வம் என்ற சீரியலை எடுத்திருந்தார்.

காஜா ஃபெரோஸ் பேட்டி: அந்த தொடரும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு பிறகு திருமுருகன் ஒரு இடைவெளியை எடுத்துக் கொண்டிருந்தார். மேலும், திருமுருகன் அறிமுகம் செய்த காஜா ஃபெரோஸ் தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சொந்த ஊரில் ஒரு செல்போன் கடையில் பணி பார்த்து இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்ய பேட்டி ஒன்றில் காஜா பெரோஸ், என்னுடைய சொந்த ஊர் தர்மபுரி. எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமா என்றால் ரொம்ப பிடிக்கும். நான் வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி படம் பார்க்க சென்று வருவேன்.

சீரியல் அனுபவம்:

பெரிய கதாநாயகர்களின் படங்களை பார்த்துவிட்டு அவர்களைப் போலவே செய்வேன். இதனை பார்த்த ஒருசிலர் நீயும் நடிக்க போகலாமே என்று ஆசையை தூண்டி விட்டார்கள். அந்த நேரத்தில் திருமுருகன் சார் நாதஸ்வரம் சீரியலுக்காக ஆடிஷன் செய்கிறார்கள் என்று தகவலை கேள்விப்பட்டு ஆடிஷனுக்காக போயிருந்தேன். ஆனால், அங்கே மிகப் பெரிய பட்டாளமே இருந்தது. இந்தக் கூட்டத்தில் நம்மை எங்கே தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், என்னை தேர்வு செய்தது மட்டுமல்லாமல் அவர் கூடவே இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரமாக என்னை மாற்றிவிட்டார்.

தொடருக்கு பின் காஜா: அந்த சீரியல் மூலம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் வந்தது. மேலும் எனக்கு சார் அடுத்தடுத்து அவருடைய தொடர்களில் வாய்ப்பு வழங்கினார். ஆனால், அவர் தொடர்களில் எடுப்பதை நிறுத்தியவுடன் எனக்கு வேறு எந்த வாய்ப்பும் வரவில்லை. அவரை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது. என்னை நம்பியும் வீட்டில் சில ஜீவன்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உண்டானது. இதனால் சொந்த ஊரில் ஒரு செல்போன் கடையில் பணி செய்து வருகிறேன். நான்தொடர்களில் நடிப்பதற்கு முன்பும் மொபைல் கடையில் தான் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.

திருமுருகன் செய்த உதவி:

நாதஸ்வரம் தொடரில் காஜா தைக்கிற பையன் கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னுடைய பெயரும் காஜா என்றே மாறிவிட்டது. தற்போது தொடரில் நடிப்பதற்கு ஆடிஷன் கொடுத்து தற்போது வந்திருக்கிறேன். கிடைத்தால்நன்றாக இருக்கும். கொரோனாவுக்கு பிறகு அனைவருமே மறந்துட்டாங்க. ஊர் பக்கம் ஏன் சீரியலுக்கு போகவில்லை என்று கேட்பாங்க.

அவ்வாறு கேட்கும் போது கஷ்டமாக இருக்கும். கொஞ்ச நாள் வேலை கிடைக்காமல் இருந்தேன். இதுவரைக்கும் திருமுருகன் சார் தான் என்னை கவனித்துக் கொள்கிறார். வீட்டு வாடகை 3 மாசம் கொடுக்க முடியவில்லை. அவர் தான் வாடகை தந்தார். அம்மா இதய நோயாளி அவர்களுடைய அறுவை சிகிச்சைக்கு சார் தான் ஒன்றரை இலட்சம் கொடுத்து உதவி செய்தார் என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் .

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here