பருத்திவீரன் படத்தில் சிறு வயது முத்தழகாக நடித்த சிறுமி இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா? ஆளே அடையாளம் தெரியாதது போல மாறிட்டாங்க..

அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன் மற்றும் கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை இன்று வரையிலும் நங்கூரமாய் பிடித்து உள்ளது. திரையரங்குகளில் ‘பருத்திவீரன்’ திரைப்படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
இயக்குநர் அமீர் மதுரை மண்வாசத்தை, வீரத்தை, திமிரும் கோபத்தையும் நம் கண்முன் கொண்டு வந்திருப்பார்.
அந்த படத்தில் நடித்த நடிகர்களை அவர்களுக்குள்ள கதாபாத்திரங்களில் அந்த கதாபாத்திரங்களாவே செதுக்கி நடிக்க வைத்திருப்பார் அமீர். மதுரை பேச்சு , நடை, பாவனை, தோரணை என அனைத்தையும் பிசிறே இல்லாமல் கதைக்கு தேவையான ஒட்டுமொத்தத்தையும் திரையில் காண்பித்திருப்பார் இயக்குநர் அமீர்.
ஒரு விழாவில் ரஜினிகாந்த்,” பருத்திவீரன் படத்தை பார்த்த பிறகு உண்மையாவே கார்த்தியின் முதல் படமா இது என்று யோசித்தேன்..’ என்று கூறினார். கார்த்தி அந்த அளவிற்கு பருத்திவீரன் கதாபாத்திரத்தில் வேற லெவலில் நடித்திருப்பார்.

தமிழ் ரசிகர்கள் இன்றும் பிரியாமணியை ‘முத்தழகு’ என்று தான் அடையாளம் கொள்வார்கள். அந்த அளவுக்கு முத்தழகு கதாபாத்திரம் மக்களிடையே ரசிக்கப்பட்டது.
மக்கள் மத்தியில் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்காக இயக்குநர் முதல் நடிகர்கள் வரை உழைத்த உழைப்பும் ஈடுபாடுகளும் கணக்கில் அடங்கா..

படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த போதிலும், மக்கள் இன்றும் பார்த்து வியக்கக்கூடிய படமாக பருத்திவீரன் உள்ளது என்றால் நிச்சயமாக மறுக்க முடியாது.
இந்த படத்தில் ‘அறியாத வயசு புரியாத மனசு’ பாடலில் சிறு வயது முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியை ஞாபகமிருக்கா?

அந்த பாடலில் வரும் சின்ன வயது முத்தழகுவின் ரீசென்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த படாலில் வரும் சிறு வயசு முத்தழகா இது என்று ரசிகர்கள் ரீசென்ட் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here