தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ள இளம் இசை புயல் : இளையராஜாவுக்கு்போட்டியா?

0
95

சாய் அபயங்கர் இவர்தான் தற்போது கோலிவுட்டின் எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒரே ஒரு ஆல்பத்தின் மூலம் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இவரின் பல ஆல்பங்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததால் இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

பிரபல நட்சத்திர பாடகி ஆன திப்பு ஹரிணி தம்பதியின் மகனான இவர், தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யாவின் படம் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம், போன்ற படங்களுக்கு இசையமைக்கிறார். அடுத்தடுத்து பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

ஆர் ஜே பாலாஜியின் படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வேண்டியது அவர் பணிபுரிய முடியாத காரணத்தால் இவர் இசையமைக்கிறார்.

அந்த இடத்துக்கு இவர் வந்தது பற்றி கூறுகையில் ரகுமான் சார்தான் என்னுடைய குரு, அவருடைய இடத்துக்கு வேறு யாரையும் தேர்வாக வைக்க முடியாது அவருடைய சம்மதத்தோடும் ஆசிர்வாதத்தோடும் தான் என்னுடைய பணியை துவக்கி உள்ளேன்.

மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் படத்தில் இசையமைப்பது என்னுடைய கனவு, அவரின் யுனிவர்சில் பணிபுரிய வேண்டும் என நினைத்தேன் அதுபோலவே நடந்து விட்டது என சாய் அபயங்கர் கூறியுள்ளார்.

இசை உலகில் இன்னும் சில வருடங்களுக்கு இவரின் காட்டில் அடைமழையாகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது…!

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here