ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ’செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் தான் நடிகை ஷபானா. இவர் இப்போ சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி என்கிற சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது திடீரென சன் டிவி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதுமட்டும் இன்றி இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகியதாகவும் இணையத்தில் தீயாய் பரவியது. இதனையடுத்து பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் இதனை குறித்து நடிகை ஷபானா விளக்கம் அளித்துள்ளார்.

ஜீ தமிழ் டிவியில் 4 வருடங்களாக ஒளிபரப்பான ’செம்பருத்தி’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதில் நடித்த ஷபானா பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வந்தார் ஷபானா. செம்பருத்தி சீரியல் போல மிஸ்டர் மனைவி சீரியலும் பெரிய அளவில் பிரபலமானது மக்கள் மத்தியில்.

இந்நிலையில் தான் ‘மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து விலகுவது தனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தாலும் ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நான் விலகுகிறேன் என்றும் மிஸ்டர் மனைவி சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேலும் இந்த சீரியலில் புதியதாக அஞ்சலி கேரக்டரில் நடிக்க இருக்கும் அந்த நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து பலரும் நான் மிஸ்டர் மனைவி’ தொடரில் விலகியதற்கு கர்ப்பமாக இருப்பதாக நினைத்து
வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், ஆனால் அது உண்மை இல்லை என்றும் ஒரு புத்தம் புதிய புரொஜக்ட் ஒன்றில் விரைவில் நல்ல கேரக்டருடன் உங்களை சந்திக்கிறேன் என்றும் நடிகை ஷபானா கூறியுள்ளார்.
மேலும் ஒரு சிலர் நடிகை ஷபானா திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்றும் அதனால் தான் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here