அந்த படத்தின் முதலில் சாய் பல்லவி இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் விட்ட பிரபலம்..!

0
230

நடன கலைஞராக தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் டைரக்க்ஷனில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். இதனைத் தொடர்ந்து,பல பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தமிழில் NGK, மாரி 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

கதாநாயகிக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக இருப்பது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றத்தினால் ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிப்பதற்கு தடை விதித்து இருக்கிறார். பெட் ரூம் காட்சிகள், முத்த காட்சிகள் அமைந்தால் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு மறுத்துவிடுகிறார்.

இந்த நிலையில், பிரேமம் படம் பற்றிய ஒரு சுவாரஷ்யமான தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் மலர் டீச்சர் ரோலில் முதன் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி இல்லையாம். இப்படத்தில் முதல் முதலில் மலர் டீச்சர் ஆக நடிப்பதாக இருந்தது பிரபல நடிகை அசின் தானாம். இது குறித்து, பேட்டி ஒன்றில் கூறிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தில் வரும் மலர் டீச்சர் கதாபாத்திரம் மட்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவராக முதலில் எழுதினேன். அதற்காக முதலில் இப்படத்தில் அசினை நடிக்க வைப்பதற்கு முயற்சிகள் செய்தேன். ஆனால், மலர் கதாபாத்திரம் தமிழாக மாறியதால் சாய்பல்லவியை நடிக்க வைத்தோம் என்று அவர் கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here