Thalaivar 171 Title : ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து கொண்டுள்ளார். த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தை பற்றி பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏனெனில் ஜெய்பீம் படத்தின் வாயிலாக அவர் இந்த சமூகத்தில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தார். இப்போது அவர் ரஜினியை கொண்டு படம் இயக்குவதால் நிச்சயமாக தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் சொல்லிக்கொண்டுள்ளனர். ரஜினி வேட்டையன் படம் முடிந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் .

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாகரிலீசான ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நெல்சன் திலீப் குமாருக்கும், ரஜினிகாந்த்துக்கும் அந்தப் படம் செம கம்பேக்காக அமைந்திருந்தது. ஏனெனில் ஜெயிலருக்கு முன்னதாக ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் தர்பார் படங்களும், நெல்சன் இயக்கிய பீஸ்ட் படமும் படுதோல்வி அடைந்தன. அதனால் ஜெயிலர் படத்தின் வெற்றி இரண்டு பேருக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அந்த படத்தை சன் பிக்சச்ர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜெயிலர் படத்தின் வசூல் 700 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில்.. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப மாறுகிறார் பார்த்திபன்!
வேட்டையன்:
அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரஜினிகாந்த். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் நடந்துவருகிறது. கண்டிப்பாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேலும் சமூக அக்கறையுள்ள படமாக இது உருவாகிறது என்று தெரிகிறது.

தலைவர் 171: Thalaivar 171 Title
இப்படியான சூழலில் ரஜினிகாந்த், கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்தாரோ அது மாதிரி இந்தப் படத்தையும் மெகா ஹிட் படமாக தர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
சமூக வலைதளங்களுக்கு நோ
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மிக அருமையாக எழுதுவதற்கென்று சமூக வலைதளங்களுக்கு தற்காலிகமாக பை சொல்லியிருக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது அவரது கதை விவாதத்துக்காக ஒரு வீட்டை ஆஃபிஸாக போட்டுக்கொடுத்திருக்கிறது. சூழல் இதுபோல இருக்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் ரஜினியின் கைகளில் தங்கத்தால் செய்த கடிகாரங்களால் விலங்கு போடப்பட்டிருந்தது.
இதுதான் தலைப்பா?
அந்தப் போஸ்டரை பார்த்த பின்னர் அந்த படத்தின் கதையை பற்றி பல்வேறு யூகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் இதில் ரஜினிகாந்த் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று ஒரு தகவலும் கிடையாது. இந்தப் படம் டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகிறது என்றும் ஒரு தகவல் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் பெயர் குறித்து புதிய தகவலானது தெரியவந்துள்ளது. என்னவென்றால் அந்த படத்துக்கு கழுகு என்று பெயர் வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். கழுகு என்ற படம் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981ஆம் ஆண்டு ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
Running Successfully Near Cinemas…
— Kollyflix (@Kollyflix) March 30, 2024
# *நேற்று* # *இந்த* # *நேரம்*
# *பூமர்*
# *Netru Intha neram*
# *Boomer Uncle*
( Madurai &Kovai)
Our UTHRA PRODUCTIONS
# *உத்ராபுரொடக்ஷன்ஸ்* release.. pic.twitter.com/M5vltjEAAG
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here