Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

மாநாடு நடக்குமா? நடக்காதா?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 15ஆம் தேதி நடத்த நடிகர் விஜய் பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் அவர்கள்,  கட்சித்…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 15ஆம் தேதி நடத்த நடிகர் விஜய் பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் அவர்கள்,  கட்சித் தொடங்கிய நாள்முதலே பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகிறது. அவர் கட்சி தொடங்குவதாக மறைமுகமாகவே அறிவிப்பு வெளியிட்டாலும் தற்போது வெளிப்படையாகவே கட்சிக்கான வேலைகளில் நடிகர் விஜய் அவர்கள் இன்று இறங்கி உள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் முறைப்படி அங்கீகாரம் பெற்றதாக அறிவிப்பையும் வெளியிட்டார்.

நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியுள்ளதால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குழப்பத்தில் உள்ளதாகவும் அந்த கட்சிகளுக்கு இனி பிரச்சனை ஆரம்பிக்க கூடும் என அரசியல் விமர்சிகர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில் நடிக்கும் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு அறிவித்தபடி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறாது என்றும் மாநாடு அடுத்த மாதம் தள்ளிப் போவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். அதேபோல மாநாடும் அடுத்த மாதம் தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது.

Advertisements

காவல்துறை நிபந்தனைகளை செப்டம்பர் 23க்குள் நிறைவேற்றுவது கடினம் என்பதால் மாநாடு தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மாநாடு தள்ளிப் போவதற்கு காவல் துறையினரை ஒரு காரணமாக கூறினாலும் இதில் அரசியல் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here