அரசியலில் நுழைய ஆசை இருக்கா? விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கூறிய தெறி பதில்

0
112

அரசியலுக்கு வர ஆசை இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அசத்தலான பதிலளித்துள்ளார் காலம் சென்ற விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன்.

கேப்டன் விஜயகாந்தின் மறைவு பெரும் சோகத்தை உண்டாக்கிய போதிலும், அவர் முன்னெடுத்துச் சென்ற வேலைகளை அவரது குடும்பத்தினர் அதே வேகத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர். விஜயகாந்த் அலுவலகத்தில், அவர் இருந்த போது எப்போதும் உணவு இருந்ததோ, அதேபோல இப்போதும் அந்த அலுவலகத்திற்கு சென்றால் எப்போதும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

Shanmuga Pandian gave the clear answer

அதேபோல, விஜயகாந்தின் அரசியல் கட்சி தேமுதிக வை , அவரது மனைவி பிரேமலதா தலைமையில் படுவேகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க, விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து கொண்டுள்ளார். இந்நிலையில், இன்றைய தினம் சண்முக பாண்டியனுக்கு பிறந்தநாள் என்பதால் தனது படக்குழுவினருடன் சேர்ந்து அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.

Shanmuga Pandian gave the clear answer
Shanmuga Pandian gave the clear answer

இதையும் படிங்க : தலைவர் 171 படத்தினுடைய பெயர் இதுவா?.. என்னப்பா புதுசு புதுசா கொழப்புறீங்க.. அந்தப் பட பெயரா?

Shanmuga Pandian gave the clear answer

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து சண்முக பாண்டியன் பேசும் போது, “என்னுடைய பிறந்தநாளை என்னோட டீம் மிக சிறப்பான ஒரு நாளாக மாற்றி இருக்கிறார்கள். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிறந்த நாளுக்காக வாழ்த்துகள் வந்து கொண்டே இருக்கு. எல்லோருக்கும் எனது நன்றி. கூடிய சீக்கிரமே எனது திரைப்படம் ரிலீசாகும். எல்லோரும் ஆதரவு தரவேண்டும்” என்றார்.

இதை தொடர்ந்து நிருபர் ஒருவர், “உங்கள் அண்ணன் விஜய பிரபாகரன் அரசியலுக்கு வந்துவிட்டார். தேர்தலிலும் நிற்கிறார். உங்களுக்கு அரசியலுக்கு வர ஆசை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த சண்முக பாண்டியன், “அண்ணன் அரசியலில் இரு்கிறான். நான் சினிமாவில் இருக்கிறேன். அப்பாவோட இரண்டு பணிகளையும் நாங்கள் பகிர்ந்து இருக்கிறோம். இப்போது நான் சினிமாவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அண்ணன் அரசியலில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான். இப்போதைக்கு அவ்வளவுதான் கூற முடியும்” என்றார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here