தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டில் நடிகர் விஜய் அவர்கள் தமிழகத்தை ஆளும் திமுகவையும்,
மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து துணிச்சலாக பேசி அசத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் மேல் ரசிகர்கள் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் விஜய் அவர்கள் பேசிய வசனங்கள் வார்த்தைகள் இல்ல மாஸ். கொள்கைகள் குறித்தும் அவர் விளக்கி பேசினார்.
இடையில் மத அரிசியல், சாதி அரசியல் என பேசியபோது ரசிகர்கள் தொண்டர்கள் ஆரவாரம் செய்து கைதட்டினர்.
பாஜகவை தான் நேரடியாக விஜய் தாக்கி பேசுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களும் தமிழக மக்களும் இதனை வரவேற்று உள்ளனர்.
திமுகவின் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. அதையும் மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
இனி நடிகர் விஜய் அவர்களின் அடுத்த கட்ட அரசியல் நிகழ்வுக்கு என்னவாக இருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழக அரசியலும் காத்துக் கொண்டிருக்கிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here