நடிகை சௌந்தர்யா
1992 ம் ஆண்டுகளில் நடிக்க துவங்கி குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை சௌந்தர்யா. ரஜினி, கமல், அமிதாப் பச்சன், விஜயகாந்த், கார்த்தி மற்றும் சிரஞ்சீவி என பல முன்னணி உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகை சௌந்தர்யா 2004ஆம் வருடம் Helicopter விபத்தில் மரணமடைந்தார். இவருடைய மரணம் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும் இவர் திருமணமாகி கர்ப்பமாக இருந்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
கிளாமர் ரொம்ப முக்கியம்
இந்த நிலையில் மறைந்த நடிகை சௌந்தர்யா, தான் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலக்கட்டத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் கிளாமர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதில் “கிளாமர் என்பது எல்லா ஆர்ட்டிஸ்களுக்கும் முக்கியமான விஷயம். எனது கண்ணோட்டத்தில் கிளாமர் என்பது கவர்ச்சியான ஆடை அணிவது அல்ல, நீங்கள் திரையில் அழகாக தெரிவது தான் கிளாமர்” என தெரிவித்துள்ளார்.
Soundarya about Glamour
— BigBoss Telugu Views (@BBTeluguViews) May 24, 2024
1980❤️ To 2004 💔 pic.twitter.com/dD35Y34PG6
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here